புதன், 22 மார்ச், 2017

அம்பேத்கர் இந்தி வெறி இல்லை மறுப்பு மராத்தி இன உரிமை பற்றி கட்டுரை

aathi tamil aathi1956@gmail.com

28/5/16
பெறுநர்: எனக்கு
Arun Natraj Chandru
இதில சில தவறுகள் உள்ளன. அம்பேத்கர் கூறியதாக பிஜேபி கூரிவரும்
கருத்துகளும் இதில் சேர்கபட்டுள்ளது.
அம்பேத்கர் எழுதிய கட்டுரையில் மொழிவழி தேவையா தேவை இல்லையா என்று
இருபக்கதில் உள்ள சாதக பாதகங்களை எழுதி இருப்பார். அதில் மொழிவழி
மாநிலங்களால் ஏற்படும் குழப்பங்கள் பற்றிய வாதங்களை எழுதியது போல அதன்
தேவையையும் பற்றி எழுதி இருப்பார். அவர் ஒரு நீதிபதி என்பதன்
எடுத்துக்காட்டாக தான் நாம் இதை பார்க்கவேண்டும். அந்த கட்டுரையின்
இறுதியில் அவர் மொழிவழி மாநிலம் அமைவதை தவிர்க்க இயலாது என்றே
கூறியுள்ளார். அதுமட்டும் அல்லாமல் வடக்கில் உள்ள மாநிலங்கள்
மிகபெரியதாகவும், அதிக மக்கள் தொகை அதிகம் கொண்டதாகவும் உள்ளதால் அரசியல்
அதிகாரத்தில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் ஆகவே உத்திர பிரதேசத்தை
நான்காக பிரிக்கவேண்டும் என்றும், மத்திய பிரதேசத்தை மூன்றாக
பிரிக்குமாரும் அறிவுறுத்தி இருப்பார். இவ்வாறு பிஜேபி பல இடங்களில்
அம்பேத்கர் கூறிய கருத்துகளை முழுமையாக கூராமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக
தனக்கு சாதகமானவற்றை எடுத்து கூரும். ஆகையால் அவற்றை நாம் நம்ப வேண்டாம்.
Refer original article here :
http://www.ambedkar.org/ambcd/05A.%20Thoughts%20on%20Linguistic%20States%20Part%20I.htm
அம்பேத்கர் மட்டுமல்ல சுதந்திர இந்தியாவிற்கு முற்பட்ட பல தலைவர்களும்
(போஸ், தேவர், காமராஜர்,..) இந்தியத்தை ஆதரித்துதான் சுதந்திர
இந்தியாவிற்காக போராடினர். ஆகையால் இந்தியா என்ற நாடு அமைய தன்னலம்
இல்லாமல் நேர்மையாக பாடுபட்ட தலைவர்களை நாம் விமர்சிக்க இயலாது.
இந்தி என்ற மொழியை அவர் ஆதரித்தார் என்பது உண்மை தான். அதற்கு வேறு
காரணங்கள் உள்ளன அதையும் அவர் தெளிவாகவே அக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.
இதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் அவர் தன்
கடமையை செய்துள்ளார். அது மட்டும் அல்லாமல் சுதந்திரம் அடைந்து
அரசியலமைப்பு செயல்படுத்த பட்டபின் மிகக்குறுகிய காலத்திலேயே அவர் இயற்கை
எய்திவிட்டார். இல்லை என்றால் அவர் தன் நிலைபாட்டை கால சூழ்நிலைக்கு
ஏற்றவாறு கட்டாயமாக மாற்றி இருக்ககூடும் .
பி. கு: அந்த கட்டுரையை முழுவதுமாக படித்திர்கள் என்றால் மாரதிய மொழிவழி
இனம் தன் அரசியல் மற்றும் பொருளாதார வலிமையை குஜராதியரிடம் இழந்து
நிற்கும் அவலத்தையும். மாராத்திய மக்கள் தன் அரசியல் உரிமைகளை பெறவேண்டிய
தேவையும் எடுத்துரைத்திரு
ப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக