செவ்வாய், 21 மார்ச், 2017

களப்பிரர் தமிழரே

aathi tamil aathi1956@gmail.com

2/10/16
பெறுநர்: எனக்கு
சங்ககாலத்திற்கு பின்னர் கிபி.3 ம் நூற்றாண்டிலிருந்து 6 ம் நூற்றாண்டு
வரை தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்டுள்ளனர்.களப்பிரர்கள் பற்றிய வரலாற்றுச்
செய்திகளை வேள்விக்குடி செப்பேடு மற்றும் தளவாய்புர செப்பேடுகள்
கிடைக்கும் வரை நாம் அறியாமல் இருந்தோம்.இச்செப்பேடுகள் கிடைக்கும் வரை
களப்பிரர் காலம் இருண்டகாலம் என்றே வரலாற்றில் கூறப்பட்டு வந்தது.ஏறத்தாழ
மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்டிருந்தாலும் அவர்கள்
ஆண்டார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லாமலே இருந்தது.அப்படி
சான்றுகள் இல்லாமல் போனது ஏதோ தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வல்ல,நன்கு
திட்டமிட்டு மூர்க்கமாக அவைகள் அழிக்கப்பட்டுள்ளன என்பதைத்தான் மேற்கண்ட
செப்பேடுகள் மற்றும் பார்ப்பன இலக்கியங்களில் உள்ள செய்திகளிலிருந்தும்
நாம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
சங்ககால தொடக்க காலத்தில் தமிழ்ச்சமூகம் சாதியற்ற சமூகமாகவே இருந்தது.வட
இந்தியாவில் ஆரிய வருகையும்,பூர்வகுடி மக்களுடனான அவர்களின் போர்,
வெற்றி, இனக்கலப்பு நால்வருணக்கோட்பாடு, சாதியத்தின் வளர்ச்சி போன்றவை
நிகழ்ந்தன.இந்த பார்ப்பனியத்தை எதிர்த்து சாங்கியம்,சமணம்,பவுத்தம் ஆகிய
மதங்கள் வட இந்தியாவில் தோன்றின.வட இந்தியாவிலும் கூட ஆரிய வருகைக்கு
முன்னர் மதங்கள் தோன்றவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
வட இந்தியாவில் பார்ப்பன நால்வருண-சாதியத்தை-பார்ப்பனியத்தை எதிர்த்து
சமண,பவுத்த சமயங்கள் தோன்றின.ஆனால் இம்மதங்கள் தமிழகத்தில் பார்ப்பன
வருகைக்கு முன்னரே வந்துவிட்டன.சாதியற்ற சமூகமாக வாழ்ந்த
தமிழ்ச்சமூகத்தில் சாதிய இழிவை எதிர்த்து உருவான சமயங்களான
சமணமும்,பவுத்தமும் செல்வாக்கு எதையும் பெறமுடியவில்லை.
இதன் பின்னர் தமிழகத்தில் ஊடுருவிய பார்ப்பனர்கள் மிக விரைவில் தமிழகத்தை
ஆண்ட ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக ஆனார்கள்.பார்ப்பனியம்
அரச மதமாக உருப்பெற்றது.எந்த அளவிற்கு சாதியம் சமூகத்தை சிதைக்க
ஆரம்பித்ததோ அந்த அளவிற்கு அதை எதிர்த்த சமணமும்,பவுத்தமும் தமிழ்
மக்களிடையே செல்வாக்குப் பெறத்தொடங்கியது.இந்த வளர்ச்சி தான்
களப்பிரர்கள் தோன்றுவதற்கான அடிப்படைகளாக அமைந்தது.களப்பிரர்கள்
தமிழகத்தை ஆளத்தொடங்கிய நிகழ்வு என்பது பார்ப்பனியத்தை எதிர்த்த
பெரும்பான்மை மக்களின் உணர்வின் வெளிப்பாடாகும்.
ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் என்று கூறப்படும் கே.ஏ.நீலகண்ட
சாஸ்திரி,மு.ராகவய்யங்கர்,டி.வி.சதாசிவ பண்டாரகத்தார்,டாக்டர்
எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார்,எம்.எஸ்.ராமசாமி அய்யங்கார் ஆகியோர் இன்று
வரை அதிலும் வேள்விகுடி செப்பேடு,தளவாய்புர செப்பேடு ஆகிய ஆவணங்கள்
கிடைத்த பின்னருங்கூட அவர்கள் தமிழர்கள் அல்லர் கருநாடகத்தில் இருந்து
தமிழகத்தின் மீது போர்தொடுத்தவர்கள் என்றும் அன்னியர்கள்
என்றும்,அவர்களின் ஆட்சி இருண்டகாலம் என்றும் கூசாமல்
புளுகுகின்றனர்.இதில் மயிலைசீனு வேங்கடசாமி அவர்கள் களப்பிரர்கள்
அன்னியர்கள் என்று கூறினாலும் அவர்கள் ஆட்சி இருண்டகாலம் இல்லை என்று
கூறுகிறார்.
மேற்கணட ஆய்வாளர்களின் நூல்களிலும்,வேள்விக்குடி மற்றும்தளவாய்புர
செப்பேடுகளில் உள்ள செய்திகளை தொகுத்து பார்க்கும் போது களப்பிரர்களின்
ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட,நடைப்பெற்ற பல்வேறு சம்பவங்களின்
அடிப்படையில் அது இருண்டகாலமா, இல்லையா என்பதை இப்போது பார்ப்போம்.
(அ).கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் என்று மேலே கண்ட வரலாற்று ஆய்வாளர்கள்
கூறும் களப்பிரர்கள் ஆட்சிகாலத்தில் தான்..........
1.வளையாபதி
2.சீவகசிந்தாமணி
3.குண்டலகேசி
4.சிலப்பதிகாரம்
5.மணிமேகலை
ஆகிய ஐம்பெரும் காப்பியங்களும்,பதிணென்கீழ்கணக்கு நூல்களும்,நாலடியார்
போன்ற நூல்களும் இன்னும் பல ஆயிரக்கணக்கான நூல்களும் உருவாகி உள்ளன.
மேலே கண்ட விவரங்களில் இருந்து நாம் பார்க்கிற போது களப்பிரர்கள்
ஆட்சிகாலம் தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக திகழ்ந்துள்ளது என்பது
தெளிவாகிறது.இவர்கள் காலத்தில் சமண.பவுத்த நூல்கள் மட்டுமல்ல சைவ சமய
நூல்களும் ஏராளமாக இயற்றப்பட்டுள்ளன.அதை இயற்றிய புலவர்களுக்கும்
எல்லாவகையான உதவிகளையும் களப்பிரர்கள் செய்துள்ளனர்.
(ஆ).களப்பிரர்கள் தமது கொடியில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின்
சின்னங்களான கயல்,வில்,புலி ஆகிய சின்னங்களையே பொறித்திருந்தனர்.தமக்கென
தனித்த அடையாளம் எதையும் அவர்கள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
(இ).சங்ககால ஆட்சியாளர்களால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட கடல் கடந்த
வணிகத்திற்கு மாற்றாக களப்பிரர்கள் ஆட்சியில் விவசாயமே மிகமுக்கிய
தொழிலாக ஊக்குவிக்கப் பட்டது.
இதைப்போன்ற பல தகவல்களை தமது நூல்களில் எழுதிவிட்டு களப்பிரர்கள் ஆட்சியை
இருண்டகாலம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதில் இருந்தே
இவர்களின் நேர்மையை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.
இவ்வரலாற்று ஆய்வாளர்கள் எனப்படுபவர்கள் தமது பார்ப்பன மூதாதையரின்
பணியையே அதாவது பார்ப்பனியத்திக்கு எதிரான களப்பிரரை எந்த வெஞ்சினத்தோடு
அழித்தொழித்து ஆனந்த கூத்தாடினார்களோ அதன் தொடர்ச்சியாகத்தான் மேற்கண்ட
பார்ப்பன ஆய்வாளர்களும் தமது பணியை தொடர்ந்துள்ளனர்.முழுமுற்றான
மூடனும்,அயோக்கியனும் மட்டுமே களப்பிரர்கள் ஆட்சியை இருண்டகாலம் என்று
கூறமுடியும்.இப்படி களப்பிரர்கள் ஆட்சியை இருண்டகாலம் என்று கூறும்
இவர்கள் மூடர்களா அல்லது அயோக்கியர்களா என்று கூறுவதற்கு இதற்கு மேலும்
ஆய்வுகள் தேவையில்லை.
களப்பிரர்கள் கன்னடர்கள் என்று கூறுவதற்கு இவர்கள் மொழியியல் ஆதாரங்கள்
என்று சிலவற்றை கூறினாலும் அவைகள் அனைத்தும் மிகவலுவான ஆதாரங்கள் என்று
எற்க இயலாது.ஏன் என்றால் களப்பிரர்கள் காலம் பொற்காலம் என்பதற்கு
வெளிப்படையான விவரங்கள் ஏராளமாக இருந்தாலும் அவை எதைப்பற்றியுமே எவ்வித
மறுப்பும் கூறாமல் அவைகளை தமது நூல்களில் எழுதிக்கொண்டே முடிவை மட்டும்
இருண்ட காலம் என்று கூறும் இவர்களின் மொழியியல் ஆதாரங்கள் எவ்விதத்திலும்
நம்பதகுந்தவைகள் அல்ல.
களப்பிரர்கள் கன்னடர்கள் என்று கூறும் இவர்கள்,அவர்கள் தமது தாய்மொழியை
வளர்ப்பதற்கு எதும் செய்தார்களா என்பது பற்றி எதும் கூறவில்லை.அதே
நேரத்தில் அவர்கள் பாலி,பிராகிருதம் ஆகிய மொழிகளுக்கு ஊக்கம் அளித்ததாக
கூறுகிறார்கள்.இவ்விரு மொழிகளுக்கும் ஆதரவு தந்தது.அவர்கள் கன்னடர்கள்
என்று நிருபிப்பதற்கான ஆதாரமாக எப்படி கூற முடியும்?
மேற்கண்ட மொழிகள் சமண,பவுத்தம் உருவான பகுதிகளின் மொழிகள் ஆகும்.இந்த
சமயங்களை பரப்புவதற்கு தமிழகத்துக்கு வந்த துறவிகளின் தேவைக்காக
அவைகளுக்கு களப்பிரர்கள் ஆக்கமும்,ஊக்கமும் தந்திருப்பார்கள் என்பது தான்
பொருத்தமான,ஏற்புடைய காரணமாக இருக்கமுடியும்.
ஆகவே களப்பிரர்கள் அன்னியர்கள் என்று இவர்கள் கூறுவது எதார்த்தமான ஒரு
வரலாற்றுச்செய்தியை,நிகழ்வை பதிவு செய்வது என்ற நோக்கத்துக்காக அல்ல.
அவர்களை தமிழர்களின எதிரிகள் என்று கொச்சைப்படுத்தி,இழிவுப்படுத்தும்
நோக்கத்துக்காகத்தான் என்பதை
suraavali.blogspot.in/2010/08/iii-3-6.html?m=1

மைசூர்
எருமையூர் தமிழ் வேளிர் மன்னன் 49 தலைமுறை கபிலர் பாரி மகளிர்
kumarikantam.blogspot.in/2011/01/blog-post_09.html?m=1
இவர் யார் என்குவை ஆயின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக