வியாழன், 23 மார்ச், 2017

சித்திரை முழுநிலவு சித்திரை நட்சத்திரம் சேரவேண்டும் வானியல் புத்தாண்டு நாட்காட்டி

aathi tamil aathi1956@gmail.com

18/4/16
பெறுநர்: எனக்கு
ஏப்ரல் 14ல் பிறந்தது சித்திரை அன்று.... பிறந்தது பிற்கால சோழர்களின்
ஞாயிறு நாள்காட்டியின் படி மேழம்/
வருடை....
வரும் ஏப்ரல் 21 அன்றே சங்கத்தமிழர் நாள்காட்டிப்படி சித்திரை பிறக்கிறது.
சித்திரை மாதம் முழுநிலவில், சித்திரை நாள்மீன் சேரும். அதுவே சித்திரை
திங்கள் தொடக்கம் மற்றும் இந்திர விழா தொடக்கம்.
சிலப்பதிகாரம் விழாவூரெடுத்த காதை:
=================================
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,
‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ என,
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை-
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து;
சித்திரை திங்கள், சித்திரை நாள்மீனில்(சித்திரை முழுநிலவு) இந்திர விழா
தொடங்கியது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
அப்படி சித்திரை முழுநிலவில் தொடங்கிய இந்திர விழா, ஒரு திங்கள்(28
நாட்கள்) நடைப்பெற்றது என்று மணிமேகலை கூறுகிறது. (நால் ஏழ் நாளினும்-
7*4=28)
உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
'மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக' என
அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்
மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும் (மணிமேகலை)
ஆக, பாண்டியர்களின் தொன்மையான திங்கள் நாள்காட்டியின் படி, வரும் ஏப்ரல்
21 முழுநிலவு அன்றே சித்திரை பிறக்கிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக