செவ்வாய், 21 மார்ச், 2017

கர்நாடகா ஒரு கோடி தமிழர் வாக்கு பலம் தேர்தல் கன்னடர் கன்னடன் எண்ணிக்கை

aathi tamil aathi1956@gmail.com

14/9/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
கர்நாடகத்தில் ஒரு கோடிக்கும் கூடுதலான தமிழர்கள் உள்ளார்கள். இவர்களில்
வாக்கு செலுத்த தகுதி பெற்றவர்கள் எழுபது விழுக்காட்டினர். அதாவது சுமார்
எழுபது லட்சம் பேர். இவர்களில் சுமார் ஐம்பது லட்சம் பேர் பெங்களூர்,
மைசூர், கோலார், மாண்டியா, சிமோகா, ராமநகரம், சாம்ராஜ்நகர் ஆகிய
மாவட்டங்களில் உள்ளனர். இங்கு இவர்கள் ஒழுங்காக வாக்களித்திருந்தாலே
பாரதீய ஜனதா, கன்னட வட்டாள் பாக்ஷா, இ.காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம்
ஆகிய இன வெறி கட்சிகள் தீய்ந்து போயிருக்கும். இவர்களின் ஒட்டு மொத்த
வாக்குகளும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும்,
மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கும் விழுந்தன. வினையை
விதைத்தால் இப்போது வினையை அறுவடை செய்கிறார்கள். மேலும், இங்குள்ள தமிழ்
அமைப்புகளும் காய்கள் அடிக்கப்பட்டவை. எனவே சமைந்த பெண் போல கூரைக்
குடிசைக்குள் குந்தியிருக்கும். தமிழ்நாட்டிலும் இதைப் பற்றி யாருக்கும்
(ஒரு சிலரைத் தவிர) அக்கறையும் இருக்காது. தமிழ் இளையோர், தமிழ்ச் சிறார்
என அனைவரும் தொலைகாட்சி முன்னாள் அமர்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டோ
அல்லது காதலிகளோடு கதைத்துக் கொண்டும் இருப்பர். ஈராயிரம் பிணங்கள்
விழுந்தாலும் தமிழன் குருடனே... ஈழப் படுகொலையின் போது தமிழன் குருடனாக
இருந்ததை தமிழ்த் தேசியவாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டும். இதுவும்
கடந்து போகும். இப்படிக்கு... கையாலாகாத அடிமைத் தமிழன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக