வியாழன், 30 மார்ச், 2017

பாண்டியர் குரு பறையர்

aathi tamil aathi1956@gmail.com

5/2/16
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர், 8 புதிய படங்கள் ஐ ஆல்பத்தில் சேர்த்துள்ளார்:
பாண்டியர்களின் குலகுரு மரபான சாம்பவர் மரபு .
பாண்டியர்களின் குலகுரு மரபான சாம்பவர் மரபு
_____________________________________________
விந்தையர் எனப்படும் சாம்பவப்பறையர் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட
தென்காசி பாண்டியர் அரசு. இவரின் ஊரான விந்தன்கோட்டையில் பாண்டியரின்
இடிந்த கோட்டை ஒன்றுள்ளது. அதில் குதிரைலாயத்தின் சிறுபகுதி மட்டுமே
இப்போது மிஞ்சியுள்ளது. இந்த விந்தன்கோட்டை அருகில் சாம்பவர் வடகரை
உள்ளது. இந்த பகுதியில் சாம்பவப்பறையர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இந்த
விந்தன்கோட்டையில் இருந்து இவர் வந்ததால் இவர் விந்தையர் எனப்பெற்றார்.
முதல் படம்
விந்தையரின் மண்டையில் உள்ள இரட்டைக்கொண்டைய
ை போன்றுதான் சில ஆதீனங்கள் இன்றும் கொண்டையிடுகிறார்கள். முதல்படத்தில்
விந்தையர் பராக்கிரம்மனுக்கு தீட்சை அளிக்கும் காட்சி புடைப்புச்சிற்ப
மாக தென்காசி பெரியகோவிலில் இடுகோயிலின் முன்னே உள்ள தூணில் உள்ளது. உடன்
பாண்டியனின் துணைவியான உலகமாதேவி.
இரண்டாம் படம்
விந்தையர் தென்காசிப்பாண்டியர் மரபைத் தோற்றுவித்த பரக்கிரம்மனின் தம்பி
குலசேகரன் காலம் வரை வாழ்ந்தார். தன் அண்ணான பராக்கிரம்மனின்
தென்காசிக்கோயிலுக்கு இணையாக கோயில் கட்ட எண்ணி குலசேகரநாதர் கோயிலை
தென்காசியில் கட்ட முயன்றான் குலசேகர பாண்டியன். அந்த கோவிலின்
இலிங்கத்தை நிர்மானிக்கும் விந்தையர். இதில் வயது முதிர்ந்துவிட்டது.
மூன்றாம் படம்
திருக்குறுங்குடியில் உள்ள பறையிசை சிற்பம். இரட்டைக்கொண்டைப் பறையரை
முதலிரண்டு படங்கலிலுள்ள விந்தையருடன் ஒப்பு நோக்கவும்.
நான்காம் ஐந்தாம் படங்கள்
சில காலம் கழித்து விந்தையர் சமாதி நிலை எய்த அவருக்குத் தென்காசி
கோயிலிலேயே சமாதியும் கட்டுவித்தான். அதன்முன்னே தன்குருவை வணங்கிய படி
பாண்டியன்.
ஆறாம் ஏழாம் படங்கள்
திருக்குறுங்குடியில் உள்ள பறையிசை சிற்பங்கள்
எட்டாம்படம்
சென்னை வடதிருமுல்லைவாய
ிலிலுள்ள பறையிசைச் சிற்பம்
இந்த படங்களில் படங்கள் 3, 6, 7 வெள் உவன் உடையவை. படம் 8
இளவரசப்பாண்டியன் (Go Green Yuvaraj) உடையது.
_________________________________
முதலாம் பாண்டியப்பேரரசில் இருந்து பாண்டியர்களின் குலகுருக்கள்
பெரும்பாலும் சாம்பவப்பறையர்களாகவே இருந்தனர். இரட்டைக்கொண்டையுடன்
சைவசமயிகளாய் பாண்டியருக்கு தீட்சை வழங்கும் இவர்களைத்தான் தமிழரசர்கள்
காலம் காலமாக சாதிய இழிவுக்கு உட்படுத்தியதாக புலம்பிவருகின்றனர் சிலர்.
அவர்களுள் ஆரியப்பிராமணர்களும், வடுக திராவிடர்களும்,
தலித்தியக்கோமாளிகளும், மார்க்சிய கம்முனாட்டிசுட்
டுகளும் (அதான்பா கம்யூனிசுட்டுன்னு சொல்லிக்கிறாங்கல அவனுங்க தான்) அடங்குவர்.
பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலேயே பாண்டியர்களின் மதுரை ஆட்சி
முடிவுக்கு வருகிறது. மிஞ்சிய சிலரும் ஒரு நூற்றாண்டு கடந்து
செண்பகப்பொழிலை (பொழில் என்றால் மழைக்காடுகள்) நகரமாக்கி அதில் தென்காசி
இடுகோயிலைக் கட்டி அதை மையமாக வைத்து தென்காசியை உருவாக்குகின்றன
ர். அப்போதும் அவர்களின் குலகுருவாக விந்தையர் எனப்பட்ட சாம்பவப்பறையரே
இருக்கிறார். இவர்களைத்தான் கோடியாண்டுகளாக தாழ்ந்த சாதி என்று சொல்லி
ஆரியப்பிராமணர்க
ளும், வடுக திராவிடர்களும், தலித்தியக்கோமாளிகளும், மார்க்சிய கம்முனாட்டிசுட்
டுகளும் அரசியல் லாபம் பார்க்கின்றனர்.
ஏற்கனவே இந்த நான்கு கருத்தியல்களையும் தகர்க்க போட்டப்பதிவுகள்
கருத்திடும் இடத்தில் உள்ளன.
@தென்காசி சுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக