|
3/11/16
| |||
Lakshmanan Guna > Press Club
-ஆர்.லெக்ஷ்மணன் குணா
(நம்ம அடையாளம் நிருபர்)
Cell:8807738137
gunajournalist@gmail.com
நெல்லையில் பிறந்தாரா எம்.ஜி.ஆர்
என் அண்ணன் எம்ஜிஆர்
இது சினிமா டைட்டில் அல்ல.
எம்ஜிஆர் ஒரு லெஜண்ட். எனவே அவரை பற்றி புதிது புதிதாக கதைகள் வந்து
கொண்டே இருக்கின்றன. வேறு நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களும் அவர்
பெயரோடு இணைக்கப்பட்டு உலா வருவது சகஜமாகி விட்டது. 90 சதவீதம் அவரது
அபிமானிகளாக இருப்பதால், இது போன்ற எல்லா கதைகளும் துணுக்குகளும்
எம்ஜிஆர் என்ற மாபெரும் சித்திரத்துக்கு அழகு சேர்ப்பதாகவே அமைகின்றன.
ஆரம்பம் முதலே அவரை பிடிக்காத மீதி பேர் உருவகப்படுத்த முனையும்
எதிர்மறையான பிம்பங்கள் அந்த மூன்றெழுத்து பேரொளியின் முன்னால் எடுபடாமல்
அமுங்கி விடுவதில் ஆச்சரியம் இல்லை.
என்றாலும் இப்போது கிளம்பியிருக்கும் புதிய கதை இதுவரை நாம் கேல்விப்படாத
புத்தம் புது ரகம்.
“எம்ஜிஆர் என்னோட அண்ணன். அவருக்கு எங்க அப்பா வச்ச பேரு வடிவேலு.
எம்ஜிஆர் பொறந்தது இதே திருநெல்வேலி மாவட்டம் உக்கிரன்கோட்டை மொட்டையனூர்
கிராமத்தில்” என்று அடித்துச் சொல்கிறார் பொன்னுத்தாய்.
இந்த 80 வயது தங்கை அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவியாக பணியாற்றியவர்.
திருநெல்வேலியில் மாவட்ட செய்தியாளர் அரங்கத்தில் பேட்டி அளித்து, 11
பக்க அறிக்கை ஒன்றையும் வினியோகித்தார். சென்ற மாதம் நடந்த இந்த
நிகழ்ச்சி குறித்து உள்ளூர் பதிப்பு நாளிதழ் ஒன்றில் ஒரு 3 பத்தி செய்தி
வெளியானதோடு சரி. ஏனைய பத்திரிகைகள் கண்டுகொள்ளவே இல்லை. தேர்தல்
பரபரப்பு மட்டும்தான் அந்த இருட்டடிப்புக்க
ு காரணம் என்று சொல்வது வெறும் சாக்காக தெரிகிறது.
நமக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையில், எம்ஜிஆரின் அசல் பெயர் மருதூர்
கோபாலன் ராமச்சந்திரன். அப்பா பெயர் கோபால மேனன். இலங்கையில் உள்ள
கண்டியில் மாஜிஸ்டிரேட்டாக பணியாற்றினார். அவர் திடீரென காலமானதால்,
மனைவி சத்யா அங்கிருந்து இரு மகன்களுடன் கும்பகோணம் வந்தார். இன்னொரு
மகன் சக்கரபாணி.
இன்னொரு தகவலும் உண்டு. கோபால மேனன் கண்டியில் காலமாகவில்லை. பணிக்காலம்
முடிந்து ஓய்வு பெற்று கேரளாவில் உள்ள வடவனூர் என்ற கிராமத்துக்கு
குடும்பத்துடன் திரும்பி வந்து அங்கு வசிக்கும்போதுதான் காலமானார்
என்பது.
பொன்னுத்தாய் சொல்லும் கதை முற்றிலும் வேறானது. நாம் அறிந்த தகவல்களில்
நிறைய முரண்பாடுகள் இருப்பதாக அவர் பட்டியல் வாசிக்கிறார்.
1917 ஜனவரி 17 எம்ஜிஆர் பிறந்த நாள் என்பது நமக்கு தெரிந்த தகவல். ஆனால்
கும்பகோணம் ஆனையடி பள்ளியில் சேர்க்கும்போது எம்ஜிஆர் பிறந்த தினம் 1916
மே 25 என பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறொரு ஆவணத்தில் பிறந்த தேதியும்
மாதமும் 17 ஜனவரி என இருந்தாலும், ஆண்டு 1916 என்று தரப்பட்டுள்ளது. இந்த
முரண்பாடுகள் தெரிவிக்கும் உண்மை என்ன என்றால் எம்ஜிஆர் பிறப்பு குறித்த
ஆவணப் பதிவுகள் திருத்தப்பட்டுள
்ளன என்கிறார் பொன்னுத்தாய்.
சரி, எப்போதுதான் பிறந்தாராம்?
எனக்கு தேதி, கிழமையெல்லாம் தெரியாது சாமி என்கிறார் பொன்னுத்தாய்.
அப்போது அதையெல்லாம் குரித்து வைக்கும் வழக்கம் கிடையாது என வர்
சொல்வதும் சரிதான்.
“உக்கிரன்கோட்டையில் எங்கள் அப்பா வசித்தார். அவர் பெயர் சண்முகம்.
அவருடைய மனைவி பெயர் மாடத்தி. அவருக்கு பிறந்த மகன் எம்ஜிஆர்.
சண்முகத்தின் இரண்டாவ்து மனைவி வெள்ளைத்தாய். அவரது மகள் பொன்னுத்தாய்
என்கிற நான். அதாவது எம்ஜிஆரும் நானும் வெவ்வேரு தாய்க்கு பிறந்த
உடன்பிறப்புகள்” என்று பொன்னுத்தாய் விவரிக்கிறார்.
அப்படியானால் சத்யபாமா, சக்கரபாணி ஆகியோருடன் எம்ஜிஆர் சேர்ந்தது எப்படி?
பொன்னுத்தாய் பதில் வைத்திருக்கிறார்.
“எம்ஜிஆர் 14 வயது வரை உக்கிரன்கோட்டையில் வளர்ந்தார். கேரளாவின் சட்ட
முன்னார் எஸ்டேட்டில் எங்கள் தந்தையின் உறவினர்கள் வசித்தனர். எம்ஜிஆர்
அங்கு சென்றிருந்தார். அப்போது அங்கே நாடகம் போட தியாகராஜ பாகவதரும்
என்.எஸ்.கிருஷ்ணனும் வந்தார்கள். அவர்கள் எம்ஜிஆரை கும்பகோணத்துக்கு
கூட்டிச் சென்றார்கள். அங்கே சத்யபாமாவை தாயாகவும் சக்கரபாணியை
அண்ணனாகவும் பாவித்து அவர்களுடன் வாழ்ந்தார் எம்ஜிஆர்”.
எம்ஜிஆருக்கு இந்த உண்மைகள் தெரியும் என்று பொன்னுத்தாய் சொல்கிறார்.
“கஷ்டப்பட்டு அண்ணனை நெருங்கி பழசையெல்லாம் ஞாபக படுத்தினேன். அப்பாவை
பாக்கணும்னு சொன்னார். இங்க வந்து விஷயத்த சொல்லி (சண்முகத்தை)
அழைச்சுட்டு போனேன். ரெண்டு பேரும் கட்டித் தழுவிகிட்டாங்க. அச்சு அசலா
ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தாங்க. கொஞ்ச நேரம்தான் பேசினாங்க.
சத்யபாமாவை அம்மான்னும் சக்கரபாணிய அண்ணன்னும் பாவிச்சு அவங்களோட
வாழ்ந்துகிட்டு இருக்கிறதால, பூர்விகம் பத்தியெல்லாம் தகவல் சொல்லி
யாரையும் குழப்ப விரும்பலைனு அண்ணன் சொன்னாரு. அப்பாவும் தலையாட்டி அது
சரிதான்னு ஏத்துகிட்டாரு”.
இவ்வளவு விஷயங்கள் சொல்லும் நீங்கள் இதில் எந்த தகவலுக்காவது ஆதாரம்
வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டோம்.
”இருந்தது எங்க அப்பா சண்முகத்தின் ஒரே ஒரு மிகப்பழைய போட்டோ
மட்டும்தான். அதில் அப்பாவை பார்த்தாலே தெரியும், எம்ஜிஆர் அவரது
மகன்தான் என்பது. அந்தளவுக்கு அச்சு அசல் ஒரே சாயல் இருக்கும். ஆனால்
கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் அந்த போட்டோவும் நாசமாகி விட்டது” என்கிறார்
ஏமாற்றத்துடன்.
பொன்னுத்தாயின் தந்தை சண்முகம், பள்ளர் இனத்தின் ஓர் உட்பிரிவான மண்ணாடி
ஜாதியை சேர்ந்தவராம்.
எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கி
தேர்தல்களில் அடுத்தடுத்து வென்று வந்த சூழ்நிலையில், அவரை மலையாளி
எனக்கூறி திமுக கடுமையாக விமர்சனம் செய்தது. அந்த பிரசாரத்தை மீறி
ஆட்சியை பிடித்துவிட்டாலும், திமுகவின் பிரசாரத்துக்கு பதிலடி தர
எம்ஜிஆர் விரும்பினார்.
எம்ஜிஆரின் மூதாதையர்கள் கோயமுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மன்றாடியார்
வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், பிழைப்புக்காக அவர்கள் கேரளாவில்
குடியேறினார்கள் என்றும் புதிய கதையொன்று உருவானது அந்த காலகட்டத்தில்தா
ன். அதிமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான அண்ணா நாளிதழில் அதன்
அடிப்படையில் எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு தொடர் கட்டுரையாக பிரசுரமானது.
அதை பின்பற்றி செந்தமிழ் வேள் எம்ஜிஆர் என்ற தலைப்பில் புலவர் ராசு ஒரு
புத்தகம் எழுதி வெளியிட்டார்.
பொன்னுத்தாய் சொல்கிறார், மன்றாடியார் என்பதே தவறு. மண்ணாடி சாதியை
சேர்ந்தவர்களை மண்ணாடியார் என சொல்லும் பழக்கம்கூட அப்போது கிடையாது
என்று. அதாவது, எம்ஜிஆரின் பூர்விகம் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த
காங்கயம் மன்றாடியார்கள் அல்ல என்பது அவர் வாதம்.
இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு இன்று திடீரென எம்ஜிஆரின் ஊர்,
ஜாதி, உறவுகள் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன என்று பொன்னுத்தாயிடம்
கேட்டோம்.
“இதெல்லாம் வெளியே சொல்ல தேவையில்லை என்று என் அண்ணன் கூறியிருந்தார்.
அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு மவுனமாக இருந்தேன். ஆனால், இன்று அவருடைய
பெயரை மட்டும் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு பிடிக்காத செயல்கள் நடப்பதை
பார்க்க வேதனையாக இருக்கிறது. அவரால் பயன் அடைந்தவர்களே அவரது ராமாவரம்
வீட்டையும் தோட்டத்தையும் கூட பராமரிக்க மனமில்லாமல் பாழாக விடுவதை
பார்த்து மனம் கலங்குகிறது. சுயநல எண்ணம் கொண்ட எவரும் எம்ஜிஆரை சொந்தம்
கொண்டாடக் கூடாது. அவர் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் சொந்தமானவர்.
பிறப்பாலும் வளர்ப்பாலும் சுத்தமான தமிழர் என்பதை நிலநாட்ட இதையெல்லாம்
சொல்ல வேண்டியிருக்கிறது” என்று பக்கா அரசியல்வாதிபோல தெளிவாக
விளக்கினார் பொன்னுத்தாய்.
பேட்டியின்போது பொன்னுத்தாயுடன் இருந்தவர் அகில பாரத குடும்பர் சத்ரிய
மகாசபா என்ற அமைப்பின் செயலாளர் சிவஜெயபிரகாஷ். அவருடைய ஆதங்கம் சற்று
மாறுபட்டது.
“ஆர்ம்பத்தில் தெரியாவிட்டாலும் பிர்காலத்தில் எம்ஜிஆருக்கு தனது பிறப்பு
வளர்ப்பு, முன்னோர்கள் பற்றிய உண்மைகள் எல்லாம் தெரியும். ஆனால், அதன்
பிறகும் அவர் தான் பள்ளர் ஜாதியில் பிறந்தவர் என்பதை வெளிப்படையாக
அறிவிப்பதை தவிர்த்தே வந்துள்ளார். ஒவ்வொரு ஜாதியினரும் தலைவர்களுக்கு
ஜாதி முத்திரை குத்தி சொந்தம் கொண்டாடும்போது, தாழ்த்தப்பட்ட
வகுப்பினருக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படக்கூடாது என்று
நினைக்கிறேன். அதற்காக எங்கள் இஅனத்துக்கு சம்பந்தமில்லாதவரை சொந்தம்
கொண்டாடுவதாக நினைத்துவிடக் கூடாது. பொன்னுத்தாய் என்ன இனம் என்பது
தெரியும். அவரது மரபணு எடுத்து எம்ஜிஆர் மரபணுவுடன் ஒப்பிட்டு சோதனை
செய்தால் உண்மை தெரிந்துவிடும். அதை செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம்”
என்கிறார் சிவஜெயபிரகாஷ்.
இதே கோரிக்கையை உள்ளடக்கி முதல்வர் முதல் கலெக்டர் வரை மனுக்களை
அனுப்பிவிட்டு காத்திருக்கிறார் பொன்னுத்தாய்.
”மறைந்து இத்தனை காலம் கடந்தும் உலகமே போற்றும் எம்ஜிஆரின் தங்கை என்பது
ஊர்ஜிதமானால் அதைவிட எனக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது?” என்று
கேட்கிறார்.
அதுவும் சரிதான்.
-ஆர்.லெக்ஷ்மணன் குணா
6 ஜூன், 04:06 PM · பொது
search எம்.ஜி.ஆர் ஒரு மலையாளியே வேட்டொலி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக