|
மார். 9 (10 நாட்கள் முன்பு)
![]() | ![]() ![]() | ||
பெரியசாமி சான்றோர் பெரியசாமி நாடார்
# கச்சத்தீவு_வரலாறு :
.
1. கூத்தன் சேதுபதி (1622 - 1635) காலத்துச் செப்பேடு தலைமன்னார் வரை
சேதுபதி அதிகாரத்துக்கு உட்பட்டது எனக் கூறுகிறது.
2. சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரிமுறை செயலுக்கு வந்த ஆண்டு 1803. இராணி
மங்களேஸ்வரி நாச்சியார் கிழக்கிந்திய நிறுவன ஆதரவோடு,
1803 முதல் 1812 வரை சேதுபதி ஜமீனாகப் பொறுப்பேற்றார். அவருக்கு
வழங்கப்பட்ட ஜமீன் உரிமைப் பட்டயத்தில், கச்சத்தீவின் ஆட்சிப்பரப்பும்
குறிக்கப்பட்டிர
ுந்தது.
3.1822-ம் ஆண்டு, கிழக்கிந்திய நிறுவனம் கச்சத்தீவைக் குத்தகைக்கு
எடுத்தது. அதற்கான பத்திர ஆவணங்கள் ஜமீன் வாரிசுகளிடம் இன்றும்
இருக்கின்றன.
4. 1858-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்திய ஒன்றிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.
இதுகுறித்து விக்டோரியா பேரரசு வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவு
சேதுபதி மன்னர்களுக்கு உரிய பகுதிகளாகவே குறிக்கப்பட்டிருந்தது.
5. இலங்கையில் பிரிட்டிஷ் அரசு பொறுப்பைக் கவனித்துவந்த பி.பி.பியரிஸும்
இதை உறுதிசெய்திருக்கிறார்.
6. 1913 ஜூலை மாதம், கச்சத்தீவு உள்ளிட்ட சில பகுதிகளைச் சென்னை மாகாண
அரசு குத்தகைக்குப் பெற்றது. குத்தகை விவரங்கள் ராமநாதபுரம் பதிவாளர்
அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்
டது.
7. 1947-ல் பதிவான இன்னொரு குத்தகைப் பத்திரத்திலும், 'கச்சத்தீவு
ராமநாதபுரம் ஜில்லா ராமேஸ்வரம் பகுதிக்குப் பாத்தியமானது' என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
8. 1957-ல் வெளியான ராமநாதபுரம் மாவட்டம் குறித்த ஆவணக் குறிப்பில்,
தனுஷ்கோடி கிராம நிர்வாகத்துக்கு உட்பட்டது கச்சத்தீவு' என்று தெளிவாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
9. 1972-ம் ஆண்டு வெளியான ஆவணக் குறிப்பில், “கச்சத்தீவு
ராமேஸ்வரத்துக்கு வட கிழக்கில் 10 மைல் தொலைவில் இருக்கும் மாவட்டப்
பகுதி என்றும், அதன் சர்வே எண் 1250 என்றும், அந்தத் தீவின் பரப்பளவு
285.2 ஏக்கர் என்றும், அங்குள்ள கத்தோலிக்க ஆலயத்தில் தங்கச்சிமடம்
பங்குத்தந்தை வழிபாடு நடத்திக்கொடுப்பார் என்றும் குறிக்கப்படுகிறது. அது
மட்டுமன்றி, ராமேஸ்வரம் கர்ணம் (அன்றைய கிராம நிர்வாக அலுவலர்)
நிர்வாகத்தில் கச்சத்தீவு இருக்கிறது'' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. 10.
இந்த ஆவணக் குறிப்பு வெளியான இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் கச்சத்தீவு
தமிழகத்துக்குச் சொந்தமில்லை என்று அப்பட்டமான பொய் சொல்லி அந்தத் தீவை
இலங்கைக்குத் தாரைவார்த்தது இந்திய ஒன்றிய அரசு.
செய்தி Gabriel Raja

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக