திங்கள், 27 மார்ச், 2017

மடையன் வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

22/3/16
பெறுநர்: எனக்கு
தென்காசி சுப்பிரமணியன்
மடத்தனம், மடப்பயலே போன்ற ஏசல் சொற்கள் தமிழர்களில் சில இனக்குழுக்களில்
உள்ள நீர் மடைப்பணி சார்ந்த இனக்குழுவை திட்டுவதாக ஒரு தலித்தியவாதி
விஜய் டிவியில் பத்தி வைக்க அது காட்டுத்தீ போல் முகநூல் முழுக்க
பரவிவிட்டது. அந்த விஜய் டிவி நிகழ்ச்சி "ஆதிக்க சாதி Vs தாழ்த்தப்பட்ட
சாதி" என்ற திராவிட அரசியல் உத்திக்கு ஆதரவாக புணையப்பட்ட நிகழ்ச்சி.
இதில் துளியும் உண்மையில்லை. மடம் என்பது மடமை என்றும் மடம் என்றும்
வேறுபட்ட சொல்லில் வழங்கப்படும் சொல். அச்சம், மடம், நானம், பயிர்ப்பு
போன்ற வரிசையில் கூட இது வருவதைக் காணலாம்.
தலித்தியவாதம் என்பது தமிழ்நாட்டில் "உலகில் உள்ள ஏசல் சொற்களை எல்லாம்
தலித்து என அடையாளப்படுத்தப் படுபவர்களுக்கு ஊரியதாக்கி அவர்களை தாழ்வு
மணப்பான்மைக்குள் உள்ளாக்கவே பேசப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
அதன் தொடர்ச்சி தான் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக