செவ்வாய், 21 மார்ச், 2017

சிங்களர் தமிழ் சாதி பெயர்கள் சிங்களவர் தமிழ் வம்சாவழி

aathi tamil aathi1956@gmail.com

21/8/16
பெறுநர்: எனக்கு
Sivakumar Kone
வீரக்கோன்,விசயக்கோன்,இலங்கைக்க
ோன்,சமரக்கோன்,அழகுக்கோன்,சமரக்
கொடி,வீரக்கொடி,
சமரவீரா,இளம்பெருமாள்,மன்னப்பெர
ுமாள்,பொன்னம்பெ
ருமாள்,பிள்ளைப்
பெருமாள்,கோனாரா,குமாரா.....
என்ன பாக்குறீங்க ??? எல்லாம் தூய தமிழ்ப் பெயர்களாக இருக்கே என்று தானே
?? இவை எல்லாம் தமிழ்நாட்டில் கூட இப்போது வழக்கொழிந்து வருகின்ற
சொற்கள். ஆனால் இவை அனைத்தும் தென்னிலங்கையைச் சேர்ந்த குடிமக்களின்
குடும்பப் பட்டப் பெயர்கள் !!
1.நம்ப முடிகிறதா ?? இவர்கள் சிங்கத்துக்குப் பிறந்திருக்க முடியுமா ???
இவர்களின் குருதி நாளங்களில் வங்க தேயத்து சிங்கக் குருதியா ஓடுகிறது ??
2) பிறகு ஏன் சிங்கலா (சிங்க + லா = சிங்கலா,சிங்க - சிங்கம் , லா -
இரத்தம் , சிங்கலா - சிங்க இரத்தம் என்று பொருள் ) என்று தங்களை
அழைத்துக்கொள்கின்றனர்?
3)"புத்தம் சரணம் கச்சாமி" என்று ஏன் இவர்கள் புலம்பிக்கொண்டி
ருக்கிறார்கள்??? பௌத்தத்தை யார் இவர்கள் மீது வலியத்திணித்தது?? ஏன் திணித்தனர்??
4) வடக்கே வாழும் தமிழர்கள் மீது ஒருவித வெறுப்புணர்வை இவர்களுக்குள்
வளர்த்து விட்ட கயவர் எவரோ??
5) முன்னாள் சேரநாடு இந்நாள் " கேர லா" ஆனதும் , தமிழர்களை வஞ்சிப்பது ஏனோ ??
6)இலங்கையிலும் சேரநாட்டிலும் அம்மண்ணின் மைந்தர்களின் இன,சமய மற்றும்
மொழி அடையாளங்களை மாற்றி, தமிழனுக்கு எதிராகத் திருப்பியவன் எவனோ???
7) இவை அனைத்தும் கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான்
நடந்திருக்கவேண்டுமல்லவா ??
" லா " என்றால் அது இரத்தத்தைக்(வம்
சம்,ஆங்கிலத்தில் Bloodline ) குறிக்கும் சொல் தான்.அதன் வேர் பாழி
மொழியாகக் கூட இருக்கலாம்.ஆனால் இன்று இவ்வார்த்தை ஆந்திராவிலும்
இலங்கையிலும் வழக்கத்தில் உள்ளது.பண்டைய நகரமான ஆந்திர அமராவதி, பௌத்த
சமயத்தின் முக்கியமான தலங்களுள் ஒன்றாகும் .பௌத்தத்தின் சமயமொழி
பாழிதான்.இதே பௌத்தம் தான் விசயனின் கதையைத் தூக்கிகொண்டு இலங்கை
சென்றது. இதன் மூலம் சிங்கலா என்ற சொல் இலங்கை சென்றிருக்கலாம்.
இன்றைய தெலுங்கர்களில் சிலர் தங்களின் வம்சத்தைக் குறிக்க " லா " என்ற
சொல்லைத் தவறாது பயன்படுத்துகிறார்கள். தங்களின் பெயரை எழுதும் பொழுது
அந்த வம்சப் பெயரையும் சேர்த்துத்தான் எழுதுவார்கள்.
எ.கா : கந்துலா ராமபிரசாத் ராவ், காக்கர்லா சத்யநாராயண ராவ்,புல்லேலா
கோபிசந்த்,புசர்
லா வெங்கட சிந்து, பெசலா ராமா ராவ்.....
இதே வடுகத் தெலுங்கர்கள் கண்டி சென்றதும் அங்கே உருவாக்கிய ஒரு வகுப்பு
தான் " ராதலா ",அதாவது அரச இரத்தம் என்று பொருளாம்!! கண்டி நாயக்க
அரசர்களின் ஆசை நாயகிகளுக்குப் பிறந்தவர்களை ராதலா என்று
அழைப்பார்கள்.இவர்கள் அரசனாக முடியாது.ஆனால் கண்டியின் உயர்வகுப்பாக
மதிக்கப்பட்டனர்.
இந்த ராதலா பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் இலங்கையை ஆண்ட இனவெறியர்களான
சிறிமா ரத்வத்தே மற்றும் அவளின் மகளான சந்திரிகா குமாராதூங்கா.
தொடரும்................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக