செவ்வாய், 21 மார்ச், 2017

கூடன்குளம் 2லட்சம் பேர் மீது வழக்கு போராட்டம் அணு அணுவுலை நாசம்

aathi tamil aathi1956@gmail.com

14/8/16
பெறுநர்: எனக்கு
Mugilan Swamiyathal , 6 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Sridar
Nedunchezhiyan மற்றும் 20 பேர் உடன்.
அணுஉலை
பிரதமரின் மகிழ்ச்சியும்... முதல்வரின் அச்சமும்!
==============================
=================
டெல்லி...
மாஸ்கோ...
சென்னை...
கூடங்குளம்!
==============================
==================
எனது பேட்டியுடன்(ஜூனியர் விகடன் - 17 Aug, 2016)
இந்த வார ஜூனியர் விகடன் இதழில்
==============================
==================
கூடங்குளம் அணுமின் நிலையம் இப்போது 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 28
ஆண்டுகள் கழித்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டுவிட்டது. ராஜீவ்
காந்தியும் கோர்ப்பசேவும் போட்ட ஒப்பந்தத்தை நரேந்திர மோடியும்
விளாதிமீர் புடினும் அமல்படுத்தி இருக்கிறார்கள். கடந்த 10-ம் தேதி
டெல்லி, மாஸ்கோ, சென்னை, கூடங்குளம் ஆகிய நான்கு இடங்களில் இருந்து
நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடந்து முடிந்துள்ளது.
மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் மின்தேவையும் அதிகமாகி
வருகிறது. அதனைச் சமாளிக்க அணு மின்சாரம் தயாரிப்புத் தவிர்க்க முடியாதது
என்று ஒரு பக்கம் சொல்லப்பட்டு வருகிறது. அதே அணுசக்தியின் ஆபத்துகள்
குறித்த அச்சமும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில்
கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்திய - ரஷ்ய ஒப்பந்தம்!
============================
1988-ம் ஆண்டு நவம்பர் 20-ம் நாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும்,
ரஷ்ய பிரதமர் மிக்கேல் கோர்ப்பசேவும் இணைந்து கூடங்குளத்தில் அணுமின்
நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார்கள். இரண்டு
நாடுகளுக்குமான நல்லுறவு இதற்கு அடித்தளம் அமைத்தது. தொடக்கத்தில் 400
மெகாவாட் மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது.
சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட பிளவு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார
நெருக்கடி காரணமாக அணுஉலை அமைப்பது மிகவும் தாமதமானது. 10 ஆண்டுகள்
கழித்து இறுதி ஒப்பந்தங்கள் எல்லாம் பேசி முடிக்கப்பட்டு அணுஉலையின்
கட்டுமானப் பணிகள் 1998-ல் ஆரம்பிக்கப்பட்டன. கட்டுமானப் பணிகளை இந்தியா
செய்வது என்றும் தொழில்நுட்ப உபகரணங்களை ரஷ்யா வழங்குவது என்றும்
முடிவானது. அப்போது இந்தியப் பிரதமராக வாஜ்பாய் இருந்தார். அவரும் ரஷ்ய
அதிபர் புடினும் போட்ட ஒப்பந்தப்படி இரண்டு அணுஉலைகள் அமைப்பது, இரண்டும்
தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் என்றும் முடிவு
செய்யப்பட்டது. 13,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தத்
திட்டமானது, 2008-ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தத்
திட்டத்துக்காக 22,000 கோடி ரூபாய் செலவு ஆகி இருக்கிறது.
யாருக்கு எவ்வளவு மின்சாரம்?
===============================
2013-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி முதல் அணு உலையில் மின் தயாரிப்புத்
தொடங்கியது. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் மத்தியத்
தொகுப்புக்கு அனுப்பப்பட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் விகிதாசார
ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி,
தமிழகத்துக்கு 563 மெகாவாட், கேரளாவுக்கு 133 மெகாவாட், கர்நாடகாவுக்கு
221 மெகாவாட், தெலங்கானாவுக்கு 50 மெகாவாட், பாண்டிச்சேரிக்கு 33
மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரையிலும் இந்த அணுஉலையில் இருந்து 6,495 மில்லியன் யூனிட் மின்சாரம்
உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டியில் மட்டும் முதலாவது
அணுஉலையில் இருந்து 2,150 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்பட்டு உள்ளது. இந்த அணுஉலையில் சுமார் 1,000 நிரந்தரப்
பணியாளர்கள் உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் 2,100 பணியாளர்கள் பணியாற்றி
வருகின்றனர்.
‘‘மேலும் 5 அலகுகள்!”
==========================
கூடங்குளத்தில் முதல் அலகு தனது செயல்பாட்டைத் தொடங்கி உள்ளது. இரண்டாவது
அலகு விரைவில் தொடங்கப்பட உள்ளது. ‘இரண்டாவது அலகை விரைந்து
செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்’ என்ற கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா
வைத்துள்ளார். இதற்கான அர்ப்பணிப்பு விழாவில், ‘‘கூடங்குளம் அணுமின்
நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மேலும் 5
அலகுகள் உருவாக்கப்படும்” என்று பிரதமர் நரேந்திரமோடி பேசி இருக்கிறார்.
இதன்மூலம் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் மின்தேவை பூர்த்தியாகும்
என்று அதிகாரிகள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
மூன்று பேரின் முரண்பாடுகள்!
===============================
இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய பிரதமர் புடின், தமிழக முதல்வர் ஜெயலலிதா
ஆகிய மூவரும் கூடங்குளம் அணுஉலையை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்கள்.
ஆனால், இந்த மூவருமே கடந்தகாலத்தில் அணுஉலை விஷயத்தில் முரண்பாடான
நிலைப்பாடு கொண்டவர்கள்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரை மக்கள் தொடர்ச்சியான
போராட்டங்கள் நடத்திக் கொண்டு இருந்தார்கள். அப்போது உள்ளாட்சித் தேர்தல்
நடந்தது. உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா,
‘‘போராடுகிற மக்களோடு நான் இருப்பேன். உங்களில் ஒருத்தி நான்’’ என்று
பேசினார்.
2013-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. அவர், குஜராத்
மாநிலத்துக்கு வரவிருந்த அணுஉலையை அங்கு நிறுவக் கூடாது என்று சொல்லி,
ஆந்திராவுக்குத் தள்ளிவிட்டார்.
செர்னோபில் அணுஉலை விபத்துக்குப் பிறகு அணுஉலையே வேண்டாம் என்று
முடிவெடுத்திருக்கும் நாடு ரஷ்யா. அதன் பிரதமர் விளாடிமர் புடின்.
இவர்கள் மூவரும்தான் கடந்த 10-ம் தேதி மாலை 3.30 மணிக்கு வீடியோ
கான்ஃபரன்சிங் மூலம் கூடங்குளம் அணு உலையை நாட்டுக்காக அர்ப்பணித்து
இருக்கிறார்கள்.
‘‘மிக்க மகிழ்ச்சி!’’
====================
கூடங்குளத்தின் முதல் அலகினை காணொலிக் காட்சி மூலமாக டெல்லியில் இருந்து
நரேந்திர மோடியும், மாஸ்கோவில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினும்
சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கூடங்குளம் அணுமின்
நிலையத்தில் இருந்து தமிழக அமைச்சர் தங்கமணி மற்றும் இந்திய அணுசக்திக்
கழகத் தலைவர் எஸ்.கே.ஷர்மாவும் பங்கெடுத்து நாட்டுக்கு அர்ப்பணித்து
உள்ளனர். டெல்லி, மாஸ்கோ, சென்னை, கூடங்குளம் ஆகிய நான்கு திசைகளிலும்
இருந்து ஒரே நேரத்தில் இந்த விழா நடந்தது.
வழக்கம்போல அதிகமாகவே ஸ்கோர் பண்ணினார் பிரதமர் மோடி. ‘‘வணக்கம்’’ என்று
தமிழில் சொல்லிப் பேச்சைத் தொடங்கினார் மோடி. தொடர்ந்து ஆங்கிலத்தில்
பேசினாலும் தனது பேச்சில் சில ரஷ்ய வார்த்தைகளை உச்சரித்து மாஸ்கோவை
அசத்தினார். இறுதியில், ‘‘மிக்க மகிழ்ச்சி’’ என்று முடித்தார். ‘கபாலி’
மோகம் பிரதமரையும் ஒட்டிக்கொண்டு விட்டது.
‘‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்த ரஷ்யாவுக்கு நன்றி’’ என்று
சொன்னார் முதல்வர் ஜெயலலிதா. ‘‘எங்கள் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன்
பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி’’ என்றார் ரஷ்ய பிரதமர் புடின். இப்படி
மூன்று பேரும் பரஸ்பர நன்றியைச் சொல்லிக் கொண்டார்கள்.
தமிழக அமைச்சரவையே தடை போட்டது!
==============================
===========
கூடங்குளம் கட்டுமானப் பணிகள் துரிதம் ஆனதில் இருந்தே கூடங்குளம்,
இடிந்தகரை, கூட்டப்புலி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்
சேர்ந்த மக்கள் அணு உலையை எதிர்த்துப் போராட்டங்களை நடத்த
ஆரம்பித்தார்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இது பெரிய தலைவலியாக
மாறியது. போராடிய மக்களின் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு, கைது என
அரசின் நடவடிக்கைகள் ஒருபக்கம் தொடர்ந்தன.
2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்தின்
காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இது
இந்தப் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியது. அதே சமயத்தில் அணு
உலையில் விபத்து ஏற்பட்டால் மக்கள் எப்படிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என்கிற பயிற்சி, கூடங்குளத்தில் நடத்தப் பட்டது.
பயிற்சியின் தீவிரத்தைப் பார்த்த மக்கள் அதிர்ந்து போனார்கள். 2011,
செப்டம்பர் 11-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இடிந்தகரை மக்கள்
அறிவித்தார்கள்.
‘‘கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையக்
கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று தமிழக அமைச்சரவைக்
கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். இதைத்
தொடர்ந்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ஆய்வை மேற்கொண்டு
அறிக்கை கொடுத்தனர். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானதுதான் என்று
சொன்னதைத் தொடர்ந்து 2012 மார்ச் 19-ம் தேதி தமிழக அமைச்சரவை இந்தத்
திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்தது. ஆனாலும் அந்தப் பகுதி மக்கள் தங்களது
போராட்டத்தை வாபஸ் வாங்கவில்லை.
போர்க்களமாகக் காட்சி அளித்த கூடங்குளம்!
==============================
============
எப்போதும் பல்லாயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்ட பகுதிகளாகக்
கூடங்குளம், இடிந்தகரை பகுதிகள் மாறின. கடலோரக் காவல் படை, மத்திய
கடலோரக் காவல் படை, கப்பல் படை, விமானப் படை விமானங்கள் எனப் போர்க்களமாக
காட்சியளித்தது கூடங்குளம். சுப.உதயகுமார், முகிலன் உள்ளிட்ட
போராட்டக்காரர்க
ள் மீது தேசத் துரோகச் சட்டம், குண்டர் சட்டம் எனப் பல்வேறு பிரிவில்
கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில்
பொறியாளர் சுந்தர்ராஜன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
ஒரேநேரத்தில் மக்கள் போராட்டமாகவும் சட்டப் போராட்டமாகவும் இது மாறியது.
2011-ல் மக்கள் போராட்டம் தொடங்கியதில் இருந்து 2013-ம் ஆண்டு வரை
1,000-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்ட
ு இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான உண்ணாவிரதப் போராட்டங்கள்
நடந்திருக்கின்றன. இதுவரை 2,27,000 பேர் மீது 380 வழக்குகள் போடப்பட்டு
இருக்கின்றன். 21 தேசத் துரோக வழக்குகளில் 8,450 பேரும், அரசுக்கு எதிரான
யுத்தம் செய்பவர்கள் எனும் வழக்கில் 13,500 பேர் மீதும் வழக்குப்
போடப்பட்டு இருக்கின்றன. இரண்டு பேர் போராட்டக்களத்தில் பலியாகி
இருக்கிறார்கள். இன்னமும் இந்தப் பட்டியல்கள் எல்லாம் தொடர்ந்துகொண்டே
இருக்கின்றன.
முகிலன் கூறும் 32 முறை பழுது!
================================
போராட்டக் களத்தில் தீவிரமாக இருக்கும் முகிலன், ‘‘தற்போது அணு உலை
செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்றும், 1,000 மெகாவாட் உற்பத்தி
செய்யப்படும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இந்த இரண்டு வருடங்களில் 32
முறை அதில் பழுது ஏற்பட்டு இருக்கிறது.
நான்கு முறை பராமரிப்புப் பணிகள் என்று சொல்லி மாதக்கணக்கில் உற்பத்தி
நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால்
யார் பொறுப்பு என்பதை இதுவரை யாரும் தெளிவாகக் கூறவில்லை.
அசம்பாவிதமே நடக்காது என்றால், எதற்கு விபத்துக் காப்பீடு சட்டம்,
பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மக்களுக்கு ஏன் பயிற்சித் தரவேண்டும்?
அணு உலைக்கு அருகே 1.6 கி.மீ., யாருமே வசிக்கக் கூடாது என்கிற விதிமுறை
இருக்கிறது. ஆனால், பாதுகாப்பற்ற பகுதி என்று சொல்லக்கூடிய 5 கி.மீ.
எல்லைக் குள்ளாகவே 2 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.
பேரிடர் மேலாண்மை பயிற்சியும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால்,
இதுபோன்று அணு உலைகள் நாட்டில் வேறு மாநிலங்களில் எங்குமே இல்லை.
மற்ற மாநிலங்களில் அந்த அரசுகள் அதை அனுமதிப்பதாகவும் இல்லை. இது எல்லாம்
தமிழக அரசுக்குத் தெரியுமா?”
என்றார் முகிலன்.
முதல்வரின் அச்சம் முக்கியமானது!
==============================
=========
இந்த விழாவில், அணுஉலை அச்சம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா
சொல்லியவை உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கவை.
‘‘கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு நான் முதல்வராக இருந்த
10 ஆண்டுகளும் முழு ஆதரவு அளித்தேன்.
அதேநேரத்தில் பாதுகாப்புக் குறித்து உள்ளூர் மக்களுக்கு எழுந்த
அச்சத்தைப் போக்குவதிலும் கவனம் செலுத்தினேன். அணுமின் நிலையத்தில்
உயர்தர பாதுகாப்பு அம்சங்களை இந்திய அணுசக்திக் கழகம் தொடர்ந்து
பின்பற்றும் என நம்புகிறேன்”
என்று சொல்லி இருக்கிறார்.
அதன்பிறகு பேசிய ரஷ்ய பிரதமர் இதற்கு பதில் சொல்லி இருக்கிறார்.
‘‘கூடங்குளம் அணுமின் நிலையம் சாதாரண வசதிகளுடன் மேம்போக்காகக்
கட்டப்படவில்லை. அது ரஷ்யாவின் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்
உருவாக்கப்பட்டுள்ளது” என்று சொல்லி இருக்கிறார்.
இந்திய - ரஷ்ய நல்லுறவு, மின்தேவை ஆகியவற்றைவிட முக்கியமானது மக்களது
நலன். மக்களின் பாதுகாப்பு!
- பி.ஆண்டனிராஜ், மா.அ.மோகன் பிரபாகரன்
View Comments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக