|
19/10/16
![]() | ![]() ![]() | ||
தமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை!
தோண்டும் இடமெல்லாம் தமிழனின் பெருமை பீறிட்டுக் கிளம்புகிறது.
அவ்வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பது, 2500ஆண்டுகள் பழமையான
பொற்பனைக்கோட்டை உலோக உருக்கு ஆலை! சமீபத்தில் மரபு வழி பயணம் மேற்கொண்ட
புதுக்கோட்டைத் தொல்லியல் ஆய்வுக் கழகம் இவற்றின் வயது தோராயமாக
2500வருடம் என வரையறுத்துள்ளது.
இயற்கைச் சீற்றமோ, படையெடுப்போ ஏதோ ஒரு விதத்தில் அழிந்து போன, ஒரு
காலத்தில் பரபரப்பாக உலோக ஒலிகள் ஒலித்துக் கொண்டிருந்த இந்த இடம் இன்று
தைலமரங்கள் புடை சூழ தேடுவார் நாதியற்றுக் கிடக்கிறது.
உலக மாந்தரின் தோற்றுவாய் தமிழர் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இரும்பை
கண்டுபிடிக்க இந்த இனம் எவ்வளவு நூற்றாண்டைக் கடந்திருக்கும்? அதை
ஆயுதமாகப் பயண்படுத்த எவ்வளவு ஆண்டுகள்? வடித்த வேலின் கூர்முனை ஒரு
நகத்தின் தின்மம் இருக்க வேண்டும் என வரையறுத்த கைதேர்ந்த தொழில்
நுட்பத்தை உருவாக்க எத்தனை ஆண்டுகள்?
பொற்பனைக்கோட்டை உலோக உருக்கு ஆலையினுடைய வயதே 2500வருடத்திற்கு
முற்பட்டதாக இருத்கிறது. எனில், நம் கையிலிருக்கும் ஆதாரத்தைக் கொண்டு
கணக்கிட்டால்க் கூட தமிழனின் நாகரீகத் தொன்மை எவ்வளவு ஆண்டுகள்?
தங்கப் பனம்பழ புதையல் உள்ள ஊர் என்ற கர்ணபரம்பரைக் கதைகளைத் தவிர்த்துப்
பார்த்தோமேயானால் பொற்பனைக்கோட்டையின் புகழ்பெற்ற பெயருக்குக் காரணம்
இந்தப் பகுதியின் சுற்று வட்டார மக்களுக்கே காவல் தெய்வமாய் பெயர்
பெற்றிருக்கும் பொற்பனைக்கோட்டை முனி!
பொன்பரப்பினான் கோட்டை என்கிற பொற்பனைக்கோட்டையில் வானாதிராயர்கள்
கட்டியாண்ட அந்த மாபெரும் கோட்டையின் மதில்கள் இடிந்து இன்று மண் அரணாய்
கிடக்கிறது. கோட்டையைச் சுற்றி காவல் தெய்வங்கள் நிர்மானிக்கப்
பட்டிருக்கிறது. அவற்றுள் இன்று வரைப் புகழ்பெற்று நிற்பவை கோட்டையின்
மேல் புறம் அமைந்திருக்கும் மேலக்கோட்டை முனி. கீழ் புறம்
அமைந்திருக்கும் கீழக்கோட்டை முனி. நடுவில் காளி கோவில்.
இந்தக் காளி கோவிலின் வடக்குப் புறத்தில் சுமார் 500மீ தொலைவில்தான் இந்த
உலோக உருக்கு ஆலையை சமீபத்தில் மரபுவழிப் பயனம் மேற்கொண்ட புதுக்கோட்டைத்
தொல்லியல் ஆய்வுக்கழகம் கண்டு பிடித்திருக்கிறது. இதில் சிறப்பு
என்னவெனில், இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப் பட்ட உலோகம் உருக்கும்
தொழிற்சாலைகளிலேயே இது ஒற்றுதான் பாறைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நீர் மேலாண்மையில் மெத்த 'மேதறிவு' படைத்த நமது அரசாங்கம் பல கிலோமீட்டர்
தூரத்திற்கு தைலமரங்களை பயிரிட்டு நாசப்படுத்தியிருக்கும் நிலப்பகுதியின்
நடுவில் அமைதியாக இன்றும் தேடுவார் நாதியற்றுக் கிடக்கிறது
பண்டைத்தமிழனின் தொழிநுட்ப அறிவை பதுக்கி வைத்திருக்கும் அந்த உருக்கு
ஆலை. அதற்கான பாதுகாப்பு அரண் எனப் பார்த்தோமானால், ஆங்காங்கே
குடிமகன்களால் உடைத்து போடப்பட்டிருக்கும் மதுபாட்டில்கள் மட்டுமே.
சமதளமான கருங்கல் பாறையில், குறிப்பிட்ட இடைவெளியில் ஆங்காங்கே கல்லில்
வடிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வட்ட வடிவ உலோகம் உருக்கும்
தொட்டிகள். அந்தத் தொட்டிகளுக்குப் பக்கத்தில், தொட்டிக்குள் காற்றைச்
செலுத்தி நெருப்பை வேகப்படுத்தும் துருத்திக்கான துளைகள். நடு நயமாக
நீள்வடிவில் உலோகத்தைக் குளிர்விக்க ஒரு தொட்டி. தொட்டியையும்
துருத்தியையும் தரைப்பரப்புக்கு கீழாக இணைத்திருக்கும் துளைகளை எந்தத்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைத்திருப்பார்கள் என்பதே மண்டை காய
வைக்கிறது. சாதாரனமாக கார்பரேசன் தண்ணீருக்காக சாலையைக் குடைந்து குழாய்
அமைப்பதற்குள்ளேயே நமக்கு நவீன இயந்திர யுகத்திலும் நாக்குத் தள்ளுகிறது.
ஆலை அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 100அடித் தொலைவிலேயே கற்களை
உடைத்தெடுத்து உலோகத்துக்கான மூலப் பொருட்களைப் பிரித்தெடுத்ததற்கான
தடயம் நம் கண்முன்னே காணக்கிடைக்கிறது. பொதுவாக இந்தப் பகுதியில்
அலுமினியத்தை அடிப்படைத் தாதுப்பொருளாகக் கொண்ட லேட்டரைட்கற்கள்
எனப்படும் செம்பூரான் கற்கள் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் வெப்ப
உலைப்பூச்சு மற்றும் உருக்கு வேலைக்குப் பயன்படும் குவார்ட்சைட்
எனப்படும் சீனிக்கற்களும் மிகுதியாகக் கானப்படுகிறது. (தகவல்
உபயம்:புதுகைத் தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் செய்திக்குறிப்பு )
இதில் திகிலடிக்கும் ஆச்சரியம் என்னவென்றால் கற்களை உடைக்க நட்ட நடுநயமாக
துளையிட்டிருக்கிறார்கள். துளைக்குள் வெடிமருந்தைப் பயன்படுத்தித்தான்
பாறைகளைப் பிளந்திருக்க வேண்டும். எனில், காலரைத் தூக்கிவிட்டுக்
கொள்ளலாம்.. ஙொய்யால, 2500வருடத்திற்கு முன்னாடியே நம்மாளு
வெடிமருந்தையும் கண்டுபிடிச்சிட்டானா? தமிழன்டா!
அங்கு கற்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மூலப்பொருட்கள் உருக்கு
ஆலையின் தொட்டிக்குள் இடப்பட்டு உருக்கப் பட்டிருக்கிறது. எந்தத் தொழில்
நுட்பத்தைப் பயன்படுத்தி உருக்கினார்கள் என்பது இன்னும் மர்மமே.
தொட்டியின் பக்கவாட்டுச் சுவர்களைக் கவனித்தால் பல அடுக்கு வண்ணங்கள்
படிந்திருக்கிறது. ஆகக் கீழே மண்ணின் வண்ணத்தைப் பிரதிபலிக்கும்
செவ்வண்ணம். அடுத்து சற்று அடர்சிவப்பு. இப்படியாக மாறிமாறி ஆக மேல்
புறத்தில் அடர்கருப்பு. அதுதான் இரும்பாக இருக்க வேண்டும். சில
தொட்டியின் மேற்புறத்தில் மிகச்சிறு அகலத்தில் வாய்க்கால் தோண்டப் பட்டு
பள்ளம் நோக்கி விடப்பட்டுள்ளது. உலோகத்தில் படிந்திருக்கும் கழிவுகளை
வெளியேற்றவாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
வட்ட வடிவத் தொட்டிகளிலிருந்து நீள்வடிவத் தொட்டிக்கு உலோக உருக்குக்
குழம்புகளை எடுத்துக்கொண்டு சொன்றதற்கான தடயங்கள் அப்பட்டமாகத்
தெரிகிறது. சான்று, ஆங்காங்கே சிந்தி கல்லில் படிந்திருக்கும் உலோகத்தின்
அடையாளம். மேற்குப் புறத்து நடுத்தொட்டியின் அருகே சிந்தியிருந்த வண்ணம்
சற்று வித்தியாசமாக இருந்தது. அனேகமாக அதுதான் அலுமினியம் உருக்கும்
தொட்டியாக இருக்க வேண்டும்.
தமிழனின் இவ்வளவு வரலாற்றுப் பெருமைகளை உள்வாங்கி உறங்கிக்
கொண்டிருக்கும் அந்த இடத்தைப் பற்றிய விபரங்கள் இப்பகுதி மக்களுக்கே
வாய்வழியாகவாவது கடத்தப்பட வில்லை என்பது வேதனை. ஊருக்குள்ள விசாரிச்சா,
"ராசா குதிரைக்குத் தண்ணி காட்ற எடத்தயா தேடுறீங்க"னு கேக்கறாய்ங்கெ.
அந்தக் காலத்துல யாரோ ஒரு பெருசு குருட்டடியா அள்ளி விட்டுட்டுப்
போயிருக்கு. நல்ல வேளை, அந்த நீள்வடிவத் தொட்டிய ராணி குளிக்கறதுனு
அள்ளிவிடாமப் போனாய்ங்கெளேனு மனநிறைவோடு கடந்தோம்.
இதைப் படிக்கும் நண்பர்கள் தயவு செய்து இதைப்பற்றிப் பேசுங்கள். அரசின்,
தொல்லியல்த்துறையின் டமாரச்செவிடு நீங்கி இந்த இடத்தை ஆய்வு மேற்கொள்ளும்
வரை பேசுங்கள்.
நாங்கள் எங்கள் முன்நகர்வாக FoxTamil சேனல் தம்பி வெங்கட்
செல்வராசாவின் முயற்சியில் இதைப்பற்றிய ஆவனப்படத்தை உருவாக்கி
இருக்கிறோம். எடிட்டிங் மற்றும் அனிமேசன் வேலைகள் நடந்து
கொண்டிருக்கிறது. இரண்டொரு நாட்களில் வெளியிட்டு விடுவோம். ஒரு வார
இதழுக்கு கட்டுரையாகவும் தயார் செய்து அனுப்பியுள்ளோம்.
இழந்ததை மீட்பது இருக்கட்டும். இருப்பதையாவது காப்போம்.
kothamangalamraja.blogspot.in/ 2016/10/blog-post_17.html?m=1

kothamangalamraja.blogspot.in/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக