வியாழன், 30 மார்ச், 2017

இயற்கை விவசாயம் உடன் விலங்கு வளர்ப்பு தோட்டம் கூட்டு வேளாண்மை புதுமுயற்சி அறிவியல் ஜீரோ பட்ஜெட் 1

aathi tamil aathi1956@gmail.com

2/2/16
பெறுநர்: எனக்கு
நம்ம ஊரு தத்தனூர் என்பவர் சேலத்து சிங்கம் மற்றும் 45 உடன் ஆகியோருடன்.
இயற்கை விவசாயி வைரக்கண்ணு ( ஆண்டு வருமானம் 13 லட்சம் 8 ஏக்கர் )
உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்
புல், பூண்டு, செடிகள், கொடிகள், மரங்கள், புழுக்கள், பூச்சிகள்,
விலங்குகள்... எனப் பல்லுயிர்கள் அடங்கியதுதான் கானகம். இவையெல்லாம்
இல்லாமல், வெறும் மரங்கள் மட்டுமே இருந்தால்... அது கானகமாக இருக்க
முடியாது.
அதேபோலத்தான் விவசாயமும்... ஒரே பயிர் வெள்ளாமை மட்டுமல்ல விவசாயம்.
பலவிதமானப் பயிர்கள் கால்நடைகள், மீன்கள்... என அனைத்தையும்
ஒருங்கிணைத்து, ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உணவாகக் கொடுத்து, குறைந்த
செலவில் அதிக லாபம் பார்ப்பதுதான் நமது பாரம்பரிய விவசாயம். இத்தகைய
'ஒருங்கிணைந்தப் பண்ணையம்’தான்... விவசாயிகளை என்றென்றைக்கும்
வாழவைக்கும்''
-இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், 'ஜீரோ பட்ஜெட் பிதாமகன்' சுபாஷ்
பாலேக்கர்... போன்ற வேளாண் ஆர்வலர்களும், விவசாயப் பொருளியல்
நிபுணர்களும் இப்படித்தான் வலியுறுத்திக் கொண்டுள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த, 'ஒருங்கிணைந்தப்
பண்ணையம்' எனும் இந்தக் கோட்பாடு, இடையில் பசுமைப் புரட்சி காரணமாக கரைய
ஆரம்பித்தாலும்... தற்போது மீண்டும் வேரூன்ற ஆரம்பித்துள்ளது. இதன்
மூலமாக லாபம் பார்க்கும் விவசாயிகள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே
இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், தஞ்சாவூர் மாவட்டம்,
பட்டுக்கோட்டை வட்டம், சிவிக்காடு-அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த
வைரக்கண்ணு.
''சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துலயும் கால்நடை வளர்ப்புலயும்
அதிக ஆர்வம். பத்தாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு விவசாயத்தைப் பாக்க
வந்துட்டேன். கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு அனுபவங்களை ஏற்படுத்திக்கிட்டு...
சம்பாதிச்சதுலதான் இப்போ, எட்டு ஏக்கர்ல ஒருங்கிணைந்தப் பண்ணையத்தை
உருவாக்கி இருக்குறேன். ரெண்டு ஏக்கர்ல தென்னை, ரெண்டு ஏக்கர்ல கோ-4, ஒரு
ஏக்கர்ல தீவனச் சோளம் இருக்கு. மூணு ஏக்கர்ல வழக்கமா இரு போகம் நெல்
போடுவேன். அதே நிலத்துல கோடையில ஒரு போகம் சோளம், நிலக்கடலை, எள்ளு,
உளுந்துனு போட்டு எடுத்துடுவேன்.
தென்னந்தோப்புக்கு உள்ளயே தனித்தனியா கொட்டகை போட்டு, அதுல 500
நாட்டுக்கோழி, 15 ஆடு, 50 ஜோடிப் புறா, 10 முயல், 9 மாடுங்கனு
வளர்த்துட்டு இருக்கேன். இதில்லாம, 15 வாத்துகளும் இருக்கு. வேலி ஓரத்துல
சூபாபுல், கிளரிசீடியா, கல்யாணமுருங்கை, வேம்பு, ஒதியன், நுணா மரங்கள்
இருக்கு. பக்கத்துல இருக்குற பஞ்சாயத்துக்குச் சொந்தமான ரெண்டு குளத்தைக்
குத்தகைக்கு எடுத்து, மீன் வளர்த்துட்டு இருக்கேன்'' என்று தன்னுடைய
ஒருங்கிணைந்தப் பண்ணை பற்றிய முன்னுரையைக் கொடுத்த வைரக்கண்ணு, பண்ணையைச்
சுற்றிக் காட்டியபடியே ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தார்.
களை எடுக்கும் கால்நடைகள்!
''தென்னந்தோப்புல மரங்களுக்கு இடையில களைகளை எடுக்கறதுக்காக உழவெல்லாம்
ஓட்டுறதில்லை. தண்ணியையும் தாராளமா கொடுக்கறதில்லை. பத்து நாளைக்கு ஒரு
தடவைனு காய்ச்சலும் பாய்ச்சலுமாத்தான் தண்ணி பாய்ச்சுவேன். இப்படிச்
செய்றதால... தென்னையோட சல்லி வேர்கள் அழுகாம இருக்கும். மண்ணும் இறுகாம
இருக்கும். களைகள், புல் பூண்டுகளை... கோழி, வாத்து, ஆடு, மாடுகள்
சாப்பிட்டுடும். இந்தச் செடிகளை அறுத்து, முயலுக்கும் கொடுப்போம். ஆடு,
மாடுகள் மேயுறதால, அதுகளோட கழிவுகள் தோப்புல விழுந்து, மண் நல்ல வளமா
இருக்கு. ஏகப்பட்ட மண்புழுக்களும் இருக்கு. அதனால, தென்னைக்கு எந்த
ஊட்டமும் கொடுக்காமலே செழிப்பா இருக்கு.
கழிவிலிருந்து உரம்!
கால்நடைக் கழிவுகள், இலை தழைகள் எல்லாத்தையும் வெச்சு, வருஷத்துக்கு 3
டன் மண்புழு உரம் தயாரிக்குறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக