|
2/10/16
| |||
Kathir Nilavan.
'கவிமணி' தேசிக விநாயகம் நினைவு நாள்
26.9.1954
காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை ஐக்கிய கேரளம் கேட்டுப் போராடியவர்கள்
மலையாளிகள். 1956இல் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு
அக்கோரிக்கைக்கு மலையாள நாயர் சங்கம் உயிரூட்ட முனனந்து தோற்றுப்போனது.
செத்துப்போன அந்த கோரிக்கைக்கு கடந்த ஆண்டு மீண்டும் இந்துத்துவ பாரதிய
சனதா கட்சி உயிர் தர முயன்றது.
திருவனந்தபுரத்தில் பாரதீய சனதா கட்சி தமிழக எம்.பி. பொன்.இராதா
கிருஷ்ணன் பேசும் போது "இந்து சமூகம் ஒற்றுமையோடு இருந்திருந்தால்
கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைந்திருக்காது" என்று கூறினார்.
இவருக்கு முன்பே இந்தி மொழி வெறிக் கட்சியான காங்கிரசில் உள்ள
அரைவேக்காடான விஜயதாரணி என்பவர் , "கன்னியாகுமரி கேரளாவோடு சேர வேண்டிய
பகுதி " என்று உளறிக் கொட்டினார். இத்தனைக்கும் இவர்கள் இருவரும் தங்களை
கன்னியாகுமரி மண்ணின் மைந்தர்களாக பீற்றிக் கொள்பவர்கள்.
இது திருவிதாங்கூர் தமிழர் வரலாற்றைப் படிக்காமலேயே மலையாளிகளுக்கு துணை
போகும் செயலாகும் என்று இன்று வரை இருவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை!
மலையாளிகள் தமிழரை எப்போதும் இந்துவாகவோ, இந்தியராகவோ ஒருபோதும்
கருதியதில்லை. தமிழரை மொழி அடிப்படையில் தான் என்றைக்கும் ஒடுக்கி
வந்தனர் என்பதே உண்மை வரலாறாகும். நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த கவிமணி
கூறும் வரலாற்று உரையினை படித்தாவது அவரகள் தன்னை திருத்திக் கொள்ள
வேண்டும்.
திருவிதாகூர் தமிழர்கள் தாய்த்தமிழகத்தோடு இணைய விரும்பி வீரஞ் செறிந்த
போராட்டத்தை நடத்திய போது அதில் தன்னை இணைத்துக் கொண்டவர் தான் கவிமணி
தேசிக விநாயகம்.
பரசுராமன் மழுவை எறிந்து படைத்து உருவாக்கியதே எமது 'கேரள பூமி' என்று
பார்ப்பனீய புராணக்கதைகளை அன்றைக்கு மலையாளிகள் அவிழ்த்து விட்டனர். அதனை
தக்க ஆதாரங்களோடு மறுத்து 1945ஆம் ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற
மூன்றாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கவிமணி முழங்கினார்.
"திருவிதாங்கூர் சேரநாட்டின் ஒருபகுதி என்பதை அறியாதவர் யார்? சேர
அரசர்கள் யாவரும் செந்தமிழ் வேந்தர்களாயிருந்தார்கள் என்பதைச் சங்ககால
இலக்கியங்கள் நமக்குக் காட்ட வில்லையா? நீங்கள் இந்த நாட்டிலுள்ள
கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றைப் பார்ப்பீர்களானால் இது,
தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்பதைச் சந்தேகமறத் தெரிந்து கொள்வீர்கள்"
அக்காலத்தில் கேரள காங்கிரசுத் தலைவரும் தீவிர மலையாளப் பற்றாளருமாகிய
கேளப்பன் என்பவர் கன்னியாகுமரி முதல் காசர்கோடு வரை ஐக்கிய கேரளம்
கேட்டுப் போராடி வந்தார். அப்போது கவிமணி அவர்கள் 1950ஆம் ஆண்டு
கன்னியாகுமரியில் நடைபெற்ற தெற்கெல்லை மாநாட்டில் இதனை கேலி செய்தும்,
மலையாளிகள் தமிழர்களை அடிமைப்படுத்தும் போக்கினை இடித்துரைத்தும் உரை
நிகழ்த்தினார்.
" கேளப்பா என்றால் கேட்பதுமில்லை, ஆதாரங்களை எடுத்துக்காட்டிப் பாராப்பா,
பாராப்பா என்றால் பார்ப்பதுமில்லை. பொறாமையும் பேராசையும்தான் கண்ணையும்
காதையும் நன்கு மறைத்து விட்டனவே! இவர்களோடு எப்படி வழக்காடுவது.
முடியாட்சி நீங்கிக் குடியாட்சி ஓங்கும் இக்காலத்தில் மக்கள் சாதி சமய
வேறுபாடுகள் ஒழித்து, மொழியால் ஒன்றுபட்டு வாழ்வதற்கு வகையேற்படுவது
இன்றியமையாதது. அதற்காகவே தெலுங்கர்கள் ஆந்திர மாகாணம் கேட்கிறார்கள்.
கன்னடர்களும் தனி மாகாணத்துக்கு அரும்பாடு படுகிறார்கள். இவ்வேளையில்,
தென் திருவிதாங்கோட்டிலும், செங்கோட்டையிலும், தேவிகுளத்திலும்,
பீர்மேட்டிலும் வாழும் தமிழர்கள் தங்களிடங்களையும் தாய்த் தமிழ்நாட்டோடு
சேர்க்க வேண்டுமென்று கேட்பதில் குற்றமென்ன இருக்கிறது?
பிரித்து விட மாட்டோமென்று கேரளீயர் சொல்வதில் யாதொரு பொருளுமில்லை.
இவர்கள் தங்களுடைய நன்மையைக் கருதிச் சொல்கிறார்களா? தமிழர்களுடைய
நன்மையைக் கருதிச் சொல்கிறார்களா? என்று சிந்திக்க வேண்டும். தங்கள்
நன்மையைக் கருதி என்றால் அது காலமறியாத பேச்சு; தமிழர்களை என்றென்றும்
தம் கீழ் அடிமைகளாக வைத்து நன்மை பெறலாமென்ற வீணாசை.
அதல்லாமல் தமிழர்களின் நன்மையைக் கருதியே சொல்கிறார்களென்றால் அது, ஆடு
நனைகிறதென்று ஓநாய் குந்தியழுவதனையே ஒக்கும். இந்தப் பேச்சை எவரும் நம்ப
மாட்டார்கள். திருவிதாங்கோட்டுத் தமிழ்நாடின்றிக் கேரளக் கொள்கையை
அடியோடு விட்டு விடட்டுமே. தமக்குத் தனி மாகாணம் வேண்டுமென்பதற்காக
லட்சாதி லட்சம் தமிழர்களின் நலன்களைப் பலியிட நினைப்பது நீதியா? முறையா?
தர்மமா?
இன்று திருவிதாங்கோடு முழுமையும் ஒரே நாடு, ஒரே நாடு என்று சொல்வதெல்லாம்
குப்பிக்குள் தண்ணீரும் எண்ணெயும் நிறைத்துக் கார்க்கால் இறுக மூடி
ஒன்றெனக் காட்டுவதற்கொப்ப
ே யன்றி வேறல்ல."
திருவிதாங்கூர் தமிழர் போராட்டக்களம் வீறு கொண்ட போது அப்போதைய பிரதமர்
நேரு அவர்கள் மலையாளிகளுக்கு துணை செய்ததை 'தினமணி' ஏட்டிற்கு அளித்த
பேட்டியில் கவிமணி சுட்டிக்காட்டினார்.
"மலையாளத்தில் சிரியன் கிறிஸ்துவர்கள், நாயர்கள், ஈழவர்கள் ஆக மூன்று
பிரதான வகுப்பினர். அவர்களுக்குள்ள தர்க்கத்தினால் அவர்களிடையே போட்டி
ஏற்படும். ஆனால் தமிழர் விவகாரம் வரும் சமயத்தில் அவர்கள் எல்லோரும்
ஒன்றாகி விடுகிறார்கள். அவர்களுக்குள்ள பலம், சக்தி, எங்களுக்குண்டா
இல்லை. நேருஜி மகாபுத்திசாலி. மகாத்மாவுக்குப் பின்னர் அவர்தான்
நாட்டிற்கு தலைவர். ஆங்கிலேயர் ஆட்சி இருந்த காலத்தில் அவர் மருமகள்
மாதிரி இருந்தார். இப்போது ஆட்சிப் பொறுப்பு வந்துவிட்டபடியால், மாமியார்
மாதிரி பேசுகிறார். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மொழி அடிப்படைதான்
முக்கியமானது. அது இயற்கையானது. நியாயமானது. தடை சொல்வது பொருந்தாது.
நேருஜி மேலிருந்து இமயமலை உச்சியிலிருந்து பிரச்சனையை பார்க்கிறார்".
ஒருமுறை எழுத்தாளர் சுந்தர ராமசாமி கவிமணியை சந்தித்து உரையாடிய போது,
"சரி, தமிழ் ராஜ்யம் ஏற்பட நாம் என்ன செய்ய வேண்டும்?" என்று கேள்வி
எழுப்பினார். அதற்கு கவிமணியிடம் வந்த பதில்: "என்ன செய்ய வேண்டும்?
ஆந்திரர்களைப் பின்பற்ற வேண்டும். மயிலே, மயிலே என்றால் இறகு போடு
என்றால் போடுமா?... மெல்ல இழுத்து எடுக்க வேண்டியது தான்!" இதைக்கூறும்
போது கவிமணியின் முகத்திலே சிறு குழந்தையின் கள்ளமும் குறும்பும் நிறைந்த
மெல்லிய சிரிப்பு ரேகை காட்டி மறைந்ததாக சுந்தர ராமசாமி
குறிப்பிடுகிறார்.
கவிமணி நோய்வாய்ப்பட்டுக் கிடந்த நேரத்தில் கேரள பட்டம் தாணுப்பிள்ளை
அரசால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதனை நினைத்து அவரின்
உடலும் உள்ளமும் வாடியது. 28.8.54இல் கவிமணியை தமிழ்நாடு காங்கிரசு
தலைவர் எஸ்.எஸ்.கரையாளர் சந்தித்தார். அப்போது கவிமணி கண்ணீர் விட்டு
அழுது நா தழுதழுக்க கூறியது இது தான்: 'எங்களைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து
விட்டு மறு காரியம் பாருங்கள்"
இந்த நிகழ்வு நடந்த ஒரு மாத காலத்தில் கவிமணி தமிழ்மண்ணை விட்டு
மறைந்தார். அவரின் கனவு நவம்பர் 1, 1956இல் நினைவானது. ஆம்! கன்னியாகுமரி
தமிழ்நாட்டோடு இணைந்தது!
கவிமணி நினைவு நாளில் தமிழர் மண்ணாகிய கன்னியாகுமரியை ஒருபோதும்
மலையாளிகளுக்கு விட்டுத்தர அனுமதியோம்!
27 செப்டம்பர், 03:49 AM · பொது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக