|
ஜன. 6
| |||
பாலக்காடு.
நேற்று, 11:53 PM ·
தனியுரிமை: பொது ·
அறிவிப்புகளைப் பெறு
மற்றுமொரு கும்பகோணம் எனலாம் பாலக்காட்டை, தமிழ் ஐயர்களும் வெள்ளாள
பிள்ளைமார்களும் நிறைந்த நகரம் பாலக்காடு. பாலை மரங்கள் அடர்ந்த காடு
என்பதே பாலக்காடு என்றழைக்கபடுகிறது.
நகரத்தின் வடக்கே இசுலாமிய மாப்பிள்ளைமார்கள் உண்டு நகரத்தின் புற
கிரமங்களில் கொங்கு வேளாளர், முதலியார், காராளர், ஈழவர், செறமர் போன்ற
குடிகளும் வாழ்கின்றனர்.
அன்று அரசு கலை கல்லூரி என்றால்கூட பாலக்காடு தான் வரவேண்டும் கோவை மக்கள் கூட,
பாலக்காடு நகரத்திற்கு புதுமுகம் தந்தவர் அந்நகரத்தின் முதல் முனிசிப்பல்
தலைவர் சின்னய்யா பிள்ளை அவர்கள். ராவ் பகதூர் சின்னய்யா பிள்ளை பற்றி உ.
வே.சாமிநாதய்யர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளமை காண்க.
பாலக்காட்டின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் மலையாறு (மலம்புழா) அணை கட்டி
தந்தவர் சென்னை மாகாண முதல்வர் காமராசர். பின்னர் மொழிவழி மாகாண
பிரிவினைக்கு பிறகு நாம் மலயாளிகளிடம் பாலக்காட்டை இழந்து விடுகிறோம்.
அதன்பின்னரே திருச்சூர் எர்ணாகுளம் பகுதியிலிருந்து நாயர்களும்
மேனன்களும் வெகுவாக குடியேற தொடங்கினர் தமிழ் நகரமும் மலயாள மயமானது.
இன்றைக்கு கூட பிள்ளைமார்களின் பெரும்பான்மை நிலங்கள் நாயர்களிடம்
கைமாற்றபட்டிருப்பது கண்கூடு. எமது பாட்டன்களின் பெயர் இன்றும் அங்குள்ள
மூத்தகுடி மக்களின் வாய்வழி உச்சரிக்கபட்டு வருவது எம் செவிகளில் கேட்டு
கொண்டுதான் இருக்கிறது.
தலைகீழாக மாறுகிறது வரலாற்று சக்கரம் மாறுவது அதன் இயல்பு என்றபோதினிலும்
அதை இயக்கும் வித்தை அறியா புதிராகவே பல முடிச்சுகளால் சிக்குண்டு
கிடக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக